loader

முதலாவது நீ

உட்புகுந்து
புலன் நிறைத்து
தலைக்கேறி தடுமாற்றி
கூட்டத்தில் தனிமையுணர்ந்து
புரியாமல் புன்னகைத்து
உடனிருப்போர் உற்றுநோக்க
பித்தனாக்கி பிதற்ற வைப்பதில்…
இரண்டாவது மது

கன்னங்கள் உரசி
காதுமடல் ஏறி
கூந்தல் நுகர்ந்து
நெற்றி முட்டி
கண்கள் பேசி
செவ்விதழ் சீண்டி
இந்நேரம் நீளாதா என ஏங்க வைப்பதில்…
இரண்டாவது குழந்தை

குறு குறு பார்வை பார்த்து
பார்வையே புன்னகையாய் மாறி
கிண்டலாய் தொடங்கி
சீண்டலாய் தொடர்ந்து
உரையாடல் தொடர்கதையாகி
பிரிவில் ஏங்கி
மனத்தில் தேங்கியத்தில்
இரண்டாவது என யாருமில்லை…

ஆகவே… என்னில் என்றும்…
முதலாவது நீ

Share