logo_light

பிரிவும் சந்திப்பும்

பிரிவுகள் அப்படி முடிந்ததில் வருத்தமொன்றுமில்லை.

ஒவ்வொரு சந்திப்பும் முந்தய பிரிவின் நீட்சி
முழுமையை காணும் முயற்சி.

பிரிவிற்கு பிறகுதான் புரிந்தது
முழுமையென்பது முடிவிலி.

சந்திப்பு கொடுப்பதோ நமக்கே நமக்கானவர் எனும் தற்காலிக விடை
பிரிவு தொடுப்பதோ அவர் கிடக்கட்டும், நீ யார்? எனும் கேள்வி

விடைக்கும் கேள்விக்குமிடையே…
உணர்ச்சி ஓங்கல்,
சித்தம் கலங்கள்,
கூச்சம் குறைதல்,
பயம் தெளிதல்,
எதிர் உயிர் உணர்வு மிதித்தல்,
திருந்தி மதித்தல்,
உள்ளம் சோர்தல்,
உள் நோக்கி நகர்தல்,
அதுவே பிரிவென நம்பல்,
இன்னும் பல.

இந்த முறையற்ற வரிசையில்
கடைசியாய் நடந்தது அந்த சந்திப்பு…
சுயத்துடன்.

அங்கு பற்றியது
உனக்கு நீயே எனும் நெருப்பு.
☯️🔥

Share