loader

பள்ளி செல்லா காலை

வைக்கோல் குட்டான் பனி புகை. நுனா மரத்தடியில் கருக்கா குவியலில் காலை உணவருந்தி கூடி பேசி குதுகளிக்கும் தவிட்டு குருவி கூட்டம். மாமர கிளைகலுக்கிடையே துரத்தி விளையாடும் பச்சை கிளிகளின் சத்தம். ஓரிடத்தில் நில்லாமல் விட்டத்திற்க்கும் கதவிற்க்கும் வாசலுக்கும் பயந்தபடி பறந்து பாடி திரியும் சிட்டுக்குருவி. மின்விளக்கில்லா சமயலறை நுழைய முனையும் சூரியனை சன்னல் கம்பிகள் தடுக்க, சரிந்து விழும் வெள்ளி கீற்றுகளாய் ஒளி வெள்ளம். வீடு பெருக்கிய நுண் துகள்கள் அவ்வோளியில் சதிராட… அதனுள்ளே புகுந்து நான் குதித்தாடா… ஆஹா… பள்ளி செல்லா காலை வேளை… சொர்க்கம்.
Share