loader

சுயத்தின் தகுதி

அம்மாவின் சமையல்…
அப்பாவின் அறிவுரை…
வியர்வையின் மனநிறைவு…
அலாரமோ அலங்காரமோ தேவைப்படாதா தூக்கம்…
மழையை, பறவையை, வண்ணத்துப்பூச்சியை, நாய் குட்டியை ரசிக்கும் மனநிலை…
டீவீ ரிமோட் சண்டை, பலகார சண்டை, சகோதர சண்டை…
சீண்டல்கள், சிணுங்கல்கள், சிலுப்பல்கள்…
சிறிய எதிர்பார்ப்பு – பெரும்மகிழ்ச்சி…
சுற்றி நிகழும் நகைச்சுவை…
எளியோரின் புன்னகை…

இவற்றில் பெரும்பான்மையை ‘நான்’ என்பதன் தகுதி ஓரம்கட்டி சலிப்படைய செய்யும்போது…
வாழ்வதன் தகுதி கேள்விக்குறியாகிறது.

Share