loader

முதற்கனவு

ஒரு சாய்தள கோணத்தில், தாம்பு கயிறு சுருள் ஒன்று உருள, அதன் நுனி பிடிக்கும் வேகத்தில் அலறி ஓடுகிறான் ஒருவன். கரிய பின்புலத்தில் கயிறும் அவனும் மட்டும் மங்கிய வெள்ளை. அவன் ஓடும் வேகத்தின் அதிர்வு என் உடலில் பிரதிபலித்து, உடல் நடுங்கி விழித்தபோதெல்லாம் தரையிலிருந்து ஓர் அடி மேலெழுந்து விழுந்ததை போன்றொரு உணர்வு. வெகு சிறு வயதில் அடிக்கடி கனவில் வந்த இதை இப்போது நினைத்தாலும் உடல் ஒருமுறை குலுங்கி முதுகு தண்டு சில்லிடுகிறது.
Share