loader

மிதிவண்டி பயணம்

சதுர மைதானம். அதை இரு சம முக்கோணங்க்களாய் பிரிக்கும் வழித்தடம். முக்கோணங்கள் முடியுமிடத்தில் என் முதல் பள்ளி. இளங்காலை காற்றுக்கெதிராக மணல் நிறைந்த மைதான வழித் தடத்தில் ஏதோ ஒரு பழைய பாடலுக்கு விசிலாடித்த்தபடி தந்தை மிதிவண்டியை அழுத்தி மிதிக்க பின்னிருக்கையில் நான், எக்காரணத்தை கொண்டும் முன் கம்பி மீது மடித்து வைத்த கால்களை மட்டும் எடுக்காதே என்ற கண்டிப்புடன். ஆண்டுகள் பல கடந்தும் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற ஒரே ஒரு நினைவு.
Share